சென்னை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஊரடங்கு முடிந்த பிறகு அவசியம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் த்ளீகி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வருட 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறாது என வதந்திகள் பரவி வருகின்றன.
இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், “முதல்வர் தலைமையில் இன்று துணை முதல்வர் உள்ளிடோர் கலந்துக் கொண்ட கூட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. 11 ஆம் வகுப்பில் பாடங்களைத் தேர்வு செய்ய, வேறு பல படிப்புக்களில் சேர டி என் பி எஸ் சி போன்ற் தேர்வுகளை எழுத 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மிகவும் அவசியமாகும்.
ஆகவே இந்த கூட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை அவசியம் நடத்த வேண்டும் எனமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வு அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணை ஒவ்வொரு தேர்வுகளுக்கு இடையிலும் ஒரு நாள் விடுமுறை இருக்கும்படி அமைக்கப்படும். தனியார் பள்ளிகள் இந்த கொரோனா நேரத்தில் கட்டணம் செலுத்த நிர்ப்பந்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.