சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், புதிதாக 10 புதிய உழவர் சந்தைகள்  – 3 காய்கறி வளாகம் மற்றும்  பனைமரங்களை பாதுகாக்க 10லட்சம் விதைகள் வழங்கப்படும் என்றும், கருப்பட்டி தயாரிக்க மானியம் வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ.381 கோடியில் 3 உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டள்ளது.

வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது,

விவசாயிகளிடையே காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக  3 புதிய மொத்த காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்பட உள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரியில், தனியார் பங்களிப்புடன் புதிய காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், அவர்களே விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் புதிதாக 10 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ப்படுவதாகவும்,  50 இடங்களில் ஏற்கனவே இயங்கி வரும் உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படுவ தாகவும் கூறப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகளில் காலையில் காய்கறிகளும், மாலையில் சிறு தானியங்களும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு மாநில மரமான பனைமரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக 10 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  மதிப்புக்கூட்டப்பட்ட பனை பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்களை வாங்க 75% மானியம் – ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், கருப்பட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு சிறப்பு மானியம் வழங்கப்படும் என்றும்  பனை மரம் ஏறும் சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.381 கோடியில் 3 உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் உணவு பூங்காக்கள் அமைக்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை. எடுக்கப்படும் என்றும், பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள் அமைக்கப்படும்.

கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில், 1,250 ஏக்கரில் பூண்டு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பூண்டு சாகுபடிக்கு, ஏக்கருக்கு ரூ.8,000 வழங்கப்படும் என கூறப்படுடள்ளது.

முருங்கை ஏற்றுமதி உள்ளிட்ட தேவைகள் ஊக்குவிக்க, அதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசின், மாணவ, மாணவியருக்கான 10 ஆயிரம் விடுதிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும்,