சென்னை:  நடப்பாண்டில் மேலும் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் என  சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  (5-ம் தேதி)  போக்குவரத்து,  சுற்றுலா,  சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி அரக்கோணத்தில் பிஎச்டி கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் ஆய்வு செய்து அதற்கான வசதிகள் இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து, கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி, கே.வி.குப்பம் பகுதியில் மகளிர் கலைக் கல்லூரி அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என  கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, “அந்த பகுதியில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி உள்ளதாக தெரிவித்தார். எனவே அந்த பகுதியில் புதிதாகக் கல்லூரி அமைக்க எந்த ஒரு நோக்கமும் இல்லை, அவசியமும் இல்லை. வரும் காலங்களில் நிதி நிலைக்கேற்ப பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்தார்.