டிரம்ப் இங்கிலாந்துக்கு வர எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் மனு!

Must read

 

 

லண்டன்,

மெரிக்க புதிய அதிபர் டிரம்ப் இங்கிலாந்துக்கு வர எதிர்ப்பு தெரிவித்து 10 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு கொடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்பை, கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.

அப்போது, டிரம்பை இங்கிலாந்து வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடன் விருந்து உண்ண வேண்டும் என ராணி விரும்புவதாக, தெரேசாமே டிரம்புக்கு கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு வருவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், அகதிகளாக வருவோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். மேலும், 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவோருக்கும் அவர் தடை விதித்தார்.

அவரது இந்த முடிவுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பல நாடுகளின் தலைவர்களும் டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் டிரம்பை இங்கிலாந்துக்கு வரவழைத்தது தவறு என அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

இங்கிலாந்து பிரதமர் டிரம்புக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்து இட்ட மனுவை தயார் செய்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் என்ற முறையில் அவர் இங்கிலாந்திற்குள் வரலாம். ஆனால்,

இங்கிலாந்து சார்பில் அழைப்பு விடுக்கும் போது அது எங்கள் ராணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு செய்தாலே, அதை எம்.பி.க்கள் விவாதிக்க வேண்டும் என்பது இங்கிலாந்தில் உள்ள சட்ட நடைமுறையாகும்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article