சென்னை: நவராத்திரை விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை போன்ற தற்போதைய விடுமுறை காலங்களில் சென்னையில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் போதிய பயணிகள் இல்லை என விமான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.
சென்னை விமான நிலையத்தில், தற்போது மூன்று பயணிகள் முனையங்கள் விமான நிலையத்தில் செயல்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமானங்கள் டெர்மினல்கள் 1 மற்றும் 4 ஆல் கையாளப்படுகின்றன, மேலும் சர்வதேச விமானங்கள் டெர்மினல் 2 ஆல் கையாளப்படுகின்றன. திறனை பெரிதும் விரிவாக்க, பழைய டெர்மினல் 3 க்கு பதிலாக புதிய செயற்கைக்கோள் முனையம் கட்டப்படுகிறது. கூடுதலாக, மீனம்பாக்கம் பயணிகள் முனையத்தில் இருந்து பிரத்யேக விமான சரக்கு வசதியும் கட்டப்பட்டுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், போதிய பயணிகள் இன்றி இன்று சுமார் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமாந நிலைய நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி, இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்துசெய்யப்பட்ட விமானங்களின் டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டதால் பயணிகளுக்கு பாதிப்பில்லை.
சென்னையிலிருந்து காலை 7.45-க்கு அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ், 11.20க்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகல் 1.20க்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா, 1.40க்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகல் 1-க்கு, அந்தமானிலிருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ், பகல் 2.45 க்கு, மதுரையிலிருந்து வரும் ஏர்-இந்தியா விமானம் ரத்து செய்யபப்ட்டுள்ளது.
மாலை 3.40-க்கு, இலங்கையிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானமும் போதிய பயணிகள் இன்றி ரத்து செய்யப்பட்டது.
அதைப்போல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு பெங்களூரில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் ஒரு மணிக்கு, அந்தமானில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூறிய விமான நிலைய அதிகாரிகள் தரப்பு கூறுகையில், ”சென்னை விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாமலும் விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும், இன்று வருகை விமானங்கள் 5, புறப்பாடு விமானங்கள் ஐந்து, மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதால், விமானங்கள் ரத்து காரணமாக, பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் 10 விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.