டெல்லி: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பை மீறாது என தெரிவித்து உள்ளது.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உயர் சாதியினர் என சொல்லப்படுவோரில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி யுயு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இவ்வழக்கை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் உள்ளனர். இந்த அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில், நான்கு விதமான தீர்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.
5நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர். தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பட் மாறுபட்ட கருத்தைதெரிவித்தனர். நீதிபதி ரவீந்திரபட் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் மற்றும் 103 வது அரசியலமைப்பு திருத்தத்தின் செல்லுபடியை உறுதிப்படுத்தும் பெரும்பான்மை தீர்ப்பை ஏற்கவில்லை. அதிகபட்ச நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு செல்லும் என்று தெரிவித்துள்ளால், அந்த தீர்ப்பு அமலாகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பில் 103ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. கொண்டு வரப்பட்ட உடனேயே, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், எதிராக உச்ச நீதிமன்றத்தில் 40 மேற்பட்ட மனுக்கள் தொடரப்பட்டன. நாட்டிலேயே அதிக பட்ச சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த இடஒதுக்கீட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து மனுதாரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறிப்பாக, கடந்த 1992ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், குறிப்பிட்ட நபர் பின்தங்கியவரா என்பதை அறிய சாதியைதான் அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் தேசிய அளவில் 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீட்டின் அளவு செல்லக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
10 சதவிகித இடஒதுக்கீடு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றுகிறது என்றும் மனுதாரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை நாடாளுமன்றத்தால் கூட மாற்ற முடியாது என கடந்த 1973ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளதா போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தீர்ப்பு அமையும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த இட ஒதுக்கீடு மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க உதவும் என்றும், அரசியலமைப்பின் கொள்கைகளையோ அல்லது முந்தைய உச்ச நீதிமன்ற உத்தரவு களையோ மீறவில்லை என்றும் அரசாங்கம் வாதிட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இந்தாண்டு செப்டம்பர் மாதம், கிட்டத்தட்ட ஆறரை மணி விசாரணைக்கு பிறகு இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று ஓய்வு பெற உள்ள யு யு லலித் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.
நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில், “இந்த ஒதுக்கீடு அடிப்படை கட்டமைப்பை மீறுகிறதா ? என கேள்வி எழுகிறது. இந்த சட்ட திருத்தம் அடிப்படை அரசியல் சாசனத்தை மீறவில்லை. வளர்ச்சி என்பது அனைவருக்கும் ஒருமித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு 50% என்பதாக இருக்க வேண்டும் என்பதை மீறவில்லை. இந்த இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதால், எந்த அடிப்படை கட்டமைப்புகளையும் மீறவில்லை. இட ஒதுக்கீடு என்பது சமமான சமுதாயத்தின் இலக்குகளை நோக்கி அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான உறுதியான நடவடிக்கையின் ஒரு கருவியாகும். இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டார். EWS திருத்தம் சமத்துவக் குறியீட்டை மீறவில்லை அல்லது அரசியலமைப்பின் அத்தியாவசிய அம்சங்களை மீறவில்லை மற்றும் 50% மீறல் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று தெரிவித்துள்ளார்,.
நீதிபதி பேலா எம் திரிவேதி கூறுகையில், அவரது தீர்ப்பு நீதிபதி மகேஸ்வரியுடன் ஒத்துப்போகிறது மற்றும் பொதுப் பிரிவில் EWS ஒதுக்கீடு செல்லுபடியாகும் மற்றும் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்று கூறுகிறார்.
இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறுகையில், உயர்கல்வியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் (EWS) இடஒதுக்கீட்டின் அரசியலமைப்பு செல்லுபடி யாகும் மற்றும் நிதி நிலைமைகளின் அடிப்படையில் பொது வேலைவாய்ப்பின் சிக்கல்கள் தொடர்பான பிரச்சினையில் நான்கு தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
நீதிபதி ஜே.பி. பார்திவாலா, பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை வழங்கும் அரசியலமைப்பின் 103வது திருத்தச் சட்டம் 2019 இன் செல்லுபடியை உறுதிப்படுத்துகிறார்.
நீதிபதி தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி ஆகியோர் அரசியலமைப்பின் 103வது திருத்தச் சட்டம் 2019 இன் செல்லுபடியாகும், இது பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை வழங்குகிறது.