சென்னை:

தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு, அன்றைய தினம் 6 மணிக்கு மேல், அவர்கள் சாப்பிடும்  உணவுக்கான பில்லில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று  ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேர்தலில் வாக்களித்தால் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்
வரும் 18ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வரும் 18ஆம் தேதி தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10% தள்ளுபடி பெற்றுகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த தள்ளுபடியை மக்கள் தங்களில் கை விரலில் உள்ள மை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடியானது பிரபல ஓட்டல்கள் அனைத்திலும் வழங்கப்படும் என்றும், சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட முன்னனி ஓட்டல்களிலுலும் சலுகை கிடைக்கும் என்று தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த சலுகையானது, மாலை 6 மணிக்கு பிறகே வழங்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.