சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள், ஜூன் 20 முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்துதெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வருகின்ற ஜூன் 20 முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் இருவழிகளிலும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி,
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும்,
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஆலபுலா, மேட்டுபாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இருவழிகளிலும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel