சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ,கூட்டுறவுத்  துறை ஊழியர்களுக்கு 10 சதவிகிதம்  போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக அரசு கூட்டுறவுத்  துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு. அதாவது , கூட்டுறவுத்  துறை ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது,

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 10% போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.   அதன்படி குறைந்தபட்ச போனஸ் ஆக 8.33% மற்றும் கருணைத் தொகை 1.67% சேர்த்து மொத்தமாக 10% போனஸ் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]