சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 11 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். அதே வேளையில் 5மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், 30 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை என்றும் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை 5,52,92,447 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,03,017 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று புதிதாக மேலும் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,34,034 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 15,95,863 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 415 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் இன்று 739 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,89,627 பேர் குணமடைந்துள்ளனர்.
கோரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,586 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 7,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சென்னையில் 123 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் 110 பேரும், ஈரோட்டில் 59 பேரும், செங்கல்பட்டில் 52 பேரும், திருப்பூரில் 40 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரியலூர், பெரம்பலூர், தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதுபோல 30 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் தருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 123 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,59,243 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மேலும் 2 பேர் பலியாகி உள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 8625 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,49,323. தற்போது சென்னையில் மட்டும் 1295 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 0
செங்கல்பட்டு 52
சென்னை 123
கோவை 110
கடலூர் 7
தருமபுரி 5
திண்டுக்கல் 3
ஈரோடு 59
கள்ளக்குறிச்சி 2
காஞ்சிபுரம் 20
கன்னியாகுமரி 14
கரூர் 15
கிருஷ்ணகிரி 14
மதுரை 4
மயிலாடுதுறை 1
நாகப்பட்டினம் 7
நாமக்கல் 40
நீலகிரி 14
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 3
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 5
சேலம் 45
சிவகங்கை 4
தென்காசி 0
தஞ்சாவூர் 14
தேனி 0
திருப்பத்தூர் 2
திருவள்ளூர் 23
திருவண்ணாமலை 8
திருவாரூர் 7
தூத்துக்குடி 2
திருநெல்வேலி 3
திருப்பூர் 49
திருச்சி 19
வேலூர் 11
விழுப்புரம் 1
விருதுநகர் 0