டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,424 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 2,923 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்புகளை அறிவித்து உள்ளது. அதன்படி, நேற்று மேலும் புதிதாக 2,424 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,14,437 ஆக உள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1.27% ஆக உள்ளது
தற்போது நாடு முழுவதும், 28,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24மணி நேரத்தில் மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,28,814 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மேலும் 2,923 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,57,544 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.75% ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 89.71 கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 91,458 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,18,99,72,644 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,84,540 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 12-14 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினருக்கான முதல் தவணை டோஸ் தடுப்பூசி 4,10,73,529 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளன.