டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு புதிதாககொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 147 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல சிகிச்சை பலனின்றி 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.28 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.19 கோடியை தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் புதிதாக 28,204 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,19,98,158 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 373 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,28,682 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில் 41,511பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,11,80,968 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.45% ஆக உயர்ந்துள்ளது

தற்போதைய நிலையில் 3,88,508 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 51,45,00,268 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 54,91,647பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ள என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.