ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 29லட்சத்தை கடந்துள்ளது. உயர்ந்து வரும் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஓராண்டை கடந்தும் மிரட்டி வருகிறது. தொற்று பரவலின் 2வது அலை, 3வது அலை என தொடர்ந்து உருமாறிய நிலையில், தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பபட்டோர் மொத்த எண்ணிக்கை 13.,52,95,662 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 10,88,59,917 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 29,28,559 பேர் தொற்று பாதிப்பு காரணமாக மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில், 23,507,146 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 10,2033 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தொற்று பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 31,802,772 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 574,840 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,346,766 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 6,881,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2வது இடத்தில் பிரேசில் தொடர்கிறது. அங்கு இதுவரை 13,375,414 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 11,791,885 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் 1,234,595 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், இதுவரை 348,934 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.
3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. அங்கு இதுவரை 12,202,783 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில், 11,987,940 பேர் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில், 1,046,376 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 168,467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.