சென்னை:
ண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வந்த 2016ம் ஆண்டிற்கான என்ஜினியரிங் கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது.
coucelling
தமிழ்நாடு முழுவதும் 525 என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் என்ஜினியரிங் படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒதுக்கீடுக்கு 1,86,670 இடங்கள் உள்ளன.  இந்த ஆண்டு கலந்தாய்வு கடந்த மாதம் 27–ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 25 நாட்கள் கலந்தாய்வு நடைபெற்றது.
கலந்தாய்வின் முடிவில் தமிழகம் முழுவதும் உள்ள  என்ஜினியரிங்  கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிப்பதற்கான 1,01,318 இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள 1,29,814 பேர்.
அரசு ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட இடங்கள் 84,352. இதில் ஆண்கள் 53,067 பேரும், பெண்கள் 31,285 பேரும் அரசு ஒதுக்கீட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். முதல் நிலை பட்டதாரிகள் 43,004 பேரும், கலந்தாய்வில் கலந்துகொண்டு, தனக்கு பிடித்த கல்லூரியில் இடம் இல்லை என்று அரசு ஒதுக்கீட்டை புறக்கணணித்தவர்களள் 557 பேர். கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்கள் 45,004 பேர்.
இந்த வருட கலந்தாய்வில் மெக்கானிக்கல் பிரிவு முதலிடத்தை பிடித்துள்ளது. மெக்கானிக்கல் பிரிவை 19 ஆயிரத்து 409 பேர்களும், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை 15 ஆயிரத்து 532 பேர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 14 ஆயிரத்து 510 பேர்களும், எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவை 9 ஆயிரத்து 480 பேர்களும், சிவில் பிரிவை 9 ஆயிரத்து 344 பேர்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவை 5 ஆயிரத்து 409 பேர்களும் தேர்ந்து எடுத்து உள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 50–க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியதாக கூறப்படுகிறது.