டெல்லி: தினசரி 1லட்சம் பேர் வரை பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா தொற்றின் 3வது அலை இந்தியாவில் இந்த மாதம் (ஆகஸ்டு) பரவும் வாய்ப்பு உள்ளதாக ஐஐடி ஆராய்ச்சி வல்லுநர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் 2வது அலை சற்றே குறைந்து மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ள நிலையில், 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் தினசரி 20ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதில், தினசரி பாதிப்பு 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அறிவித்துள்ளள ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொறறு பரவல் அதிகரித்து வருகிறது. இதை ஆய்வுசெய்யும்போது, கொரோனா 3வது அலை ருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அவ்வாறு 3வது அலை இந்த மாதம் ஏற்பட்டால், அதன் கோரமுகம் அக்டோபரில் தெரிய வரும். அக்டோபர் மாதம் 3வது அலையின் உச்சபட்ச தாக்குதல் இருக்கும் என்றாலும் உயிரிழப்பு அதிக அளவில் இருக்காது என்று தெரிவித்து உள்ளனர்.