கோவை:

கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த இரண்டு முன்னாள் குற்றவாளிகளிடம  சோதனை நடத்தியதில், அவரிடம் கள்ளநோட்டு இருந்தது தெரிய வந்தது.

கோவை  கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், மற்றும் அவருடன் வந்த காரமடையைச் சேர்ந்த சுந்தர் ஆகிய இருவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், அவர்கள்  கொடுத்த தகவலையடுத்து, கள்ளநோட்டு தயாரிக்கப்பட்டு வந்த குடோனை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, குடோனில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து, கலர் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை எடுத்து அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாக கூறும் போலீசார், தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.