சென்னை: சென்னை உள்பட அண்டை மாநிலங்களை புரட்டிப்போட்ட, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம்  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர்,  மற்றும் ராணிப்பேட்டை  உள்ளிட்ட 5 மாவட்டங்களில 1. 20 கோடி பேர் புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 4ந்தேதி  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசியது.  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. நீர் நிரம்பியதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மீட்பு பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு,  சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒருகோடியே 20 லட்சம் பேர் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தாம்பரம் தொகுதியில் கன்னடபாளையம், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார்நகர், சசிவரதன் நகர் ஆகிய பகுதிகளில் புயல் மழையால் பாதிப்பு அடைந்த 2800 குடும்பங்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் அரிசி, மளிகை தொகுப்பு, காய்கறிகள், ரொட்டி, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, புயல் பாதிப்பு காரணமாக,  முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசிடம் 5060 கோடி நிவாரணம்  அனுப்ப வேண்டும் என கடிதம் மூலம் கேட்டு கொண்ட நிலையில் நான் பிரதமரை நேரில் சந்தித்து பேசி முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி வழங்க கோரினேன். அதற்கு பிரதமர் கூட்டாக நிவாரண பணிகளை மேற்கொள்வோம் என்றார். தற்போது 450 கோடி அனுப்பட்டு பட்டுள்ள்து, செலவு செய்திட செய்திட நிதி அனுப்புவார்கள் என நம்பிக்கை உள்ளது  என்றார்.

மேலும், இந்த புயல் காரணமாக   சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒரு கோடியே 20 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றவர், அதனால் இந்த புயல் பாதிப்பை  தேசிய பேரிடராக அறிவிக்கவேண்டும் என கேட்டுகொண்டுள்ளோம். அதனால் அதிக நிதி கிடைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீரமைப்பு பணி செய்யலாம் என்றார். தற்போது பாதிப்பு குறித்து ஊரக, நகர்ப்புற, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள், அதன் பின்னர் எவ்வளவு பாதிப்பு என முழுவிவரம் தெரியவரும் என்றார்.