சென்னை: “உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர்”துறை மூலம் 70நாட்களில் 1.76 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை மதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை உருவாக்கப்பட்டு, தேர்தல் சமயத்தில் மனு கொடுத்த பயனாளிகளின் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 70 நாட்களில் 1.76 மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 10 ஆண்டுகளில் தீர்வு காணப்பட்ட மனுக்களின் சராசரி எண்ணிக்கையை விட கூடுதலாகும்.
அடுத்த 30 நாட்களில் மீதமுள்ள மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.