சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின்படி, தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தமிழகத்தில் இதுவரை 1.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள் உள்பட 11,396 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அவர்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி 8,894 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசி 2,502 பேருக்கும் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 நாள்களில் மொத்தம் 1,57,046 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.