ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்து 50ஆயிரத்தை  கடந்துள்ளது.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா பெருந்தெற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது.  தொற்று பரவத் தொடங்கி 2வது ஆண்டை நெருங்கும் நிலையிலும், உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கி வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் நீடித்து வருகிறது. தொற்ற பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு  தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் இதுவரை 237,964,211  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி  4,856,163 பேர் இதுவரை உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 215,096,704பேர் குணமடைந்து வீடு திரும்பிய உள்ளனர்.

தற்போதைய நிலையில், 18,011,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17,927,860 (99.5%) பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 83,484 (0.5%) பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன