சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,587 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 179 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,27,365 பேர் ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,073 ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரையில் 25,76,112 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 16,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில், நேற்று 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த பாதிப்பு 5,45,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,418 ஆக அதிகரித்துள்ள, நேற்று . 153 பேர் குணம் அடைந்து, இதுவரை மொத்தம் 5,35,273 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 1835 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
07.09.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 43,26,820 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 07.09.2021 அன்று 35,783 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு








