குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது.
ணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு மீறக் கூடாது
யுதப் படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தின்படி, பதற்றம் நிறைந்த பகுதிகளாக இருந்தாலும், ராணுவத்தினரோ அல்லது துணை ராணுவத்தினரோ தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறிச் செயல்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
செங்கம் அருகே கோட்டாங்கல் கிராமத்தில் 3 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக ஆண்டாள் உள்பட 3 பேரின் குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம்  ஆம்பூர் அருகே மின்னுர் காலிங்காபுரத்தில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது. விவசாய நிலத்தில் சுற்றி வரும் யானையை காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
download (2)
லங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் கூடுதல் ஒத்துழைப்பு:மோடி -தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா முடிவு
இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்பு, உற்பத்தித் துறை போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரித்துக் கொள்வதென முடிவு செய்துள்ளன.
இலவச கணினி பயிற்சி
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகக் கட்டடத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு “ஓ நிலை கணினி ஹார்டுவேர் பயிற்சி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இதில், 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை பயிற்சி மையத்தில் இலவசமாகப் பெற்றுக் கொண்டு, கல்வி, வேலைவாய்ப்புப் பதிவுச் சான்றிதழ்களின் நகல்களுடன் ஜூலை 28-க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்
லக பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கும் நட்சத்திரமாக மின்னுகிறது– தென் ஆப்ரிக்க வர்த்தகர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி
.எஸ் பயங்கரவாதிகள் இயக்கத்தில கேரள இளைஞர்கள் இணைந்துள்ளதை அடுத்து மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
மிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
யர்நீதிமன்றமே பல வழக்குகளில் நேரடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் உத்தரவுகள் பாராட்டுக்குரியது–விஜயகாந்த்
கோச்சடையான் பட விநியோக வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஆட்பீரோ நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அதிகரிப்பதைக் கண்டித்து பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விபத்தில்லா நாளாக கடைப்பிடிக்கப்படுவதால் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போலீசார் சென்னை முழுவதும் வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள்.