டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒடிசாவில் 64 மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்ட உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் ஒடிசா மாநிலம் ராகடா மாவட்டத்தில் 64 பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. அகமதாபாத்தை அடித்தளமாக கொண்டு செயல்பட்டு வரும், மாணவர்களுக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விடுதிகளில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் மருத்துவக் குழுக்கள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், நிறுத்தப்பட்டுள்ளன.
அதுபோல அகமதாபாத்தை தளமாகக் கொண்ட தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்ஐடி) கடந்த மூன்று நாட்களில் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தது, அவர்களில் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளல் 3,207 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு ஆக உயர்ந்துள்ளது, 4,31,05,401 ஆக உயர்ந்தது.
நேற்று மேலும் 29 பேர் இறந்துள்ளனர். இதன்முலம் இதுவரை உரிழந்தோர் மொத்த உ எண்ணிக்கை 5,24,093ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் 3,410 பேர் குணமடைந்துள்ளனர். இதன்முலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,60,905 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,403 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,50,622 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,90,34,90,396 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.