ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 5 கோடியை  நெருங்கி உள்ளது.  உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் பதிறன்டரை லட்சத்தை எட்டி உள்ளது.

உலக நாடுகளை  மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது. கடந்தஆண்ட டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் இருந்து பரவத்தொடங்கிய இந்த உயிரிக்கொல்லி வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட  பல நாடுகளில்  மீண்டும் அதிகரிக்கத் தொடக்கி உள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி  4,96,45,848  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.52 கோடிக்கும் அதிகமானோர், அதாவது 3,52,43,033 பேர்  குணமடைந்துள்ளனர்.  மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12,4,971  போர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில்,  உலகம் முழுவதும் 13.15 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.