சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  29பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  இன்று வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,969பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,127பேர் ஆண்கள், 842பேர் பெண்கள்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 73ஆயிரத்து 352ஆக அதிகரித்துள்ளது.  தற்போது மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 286ஆக குறைந்துள்ளது.

இன்று 29பேர் உயிரிழந்துள்ளார். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,839பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 18 ஆயிரத்து 777ஆக அதிகரித்துள்ளது.

[youtube-feed feed=1]