சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை திகழ்ந்து வருகிறது.  தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,87,554 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,20,41,933 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்து வருகிறது.  அதிகபட்சமாக  சென்னையில் நேற்று  356 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,867 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,09,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை  சிகிச்சை பலனின்றி 3,867 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 3,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை யில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்:

கோடம்பாக்கம் – 364 பேர்

அண்ணா நகர் – 385 பேர்

தேனாம்பேட்டை – 314 பேர்

தண்டையார்பேட்டை – 160 பேர்

ராயபுரம் – 205 பேர்

அடையாறு- 401 பேர்

திரு.வி.க. நகர்- 326 பேர்

வளசரவாக்கம்- 248 பேர்

அம்பத்தூர்- 300 பேர்

திருவொற்றியூர்- 82 பேர்

மாதவரம்- 155 பேர்

ஆலந்தூர்- 158 பேர்

பெருங்குடி- 148 பேர்

சோழிங்கநல்லூர்- 90 பேர்

மணலி – 55 பேர்.

 

 

[youtube-feed feed=1]