ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை  21.99 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா 3வது அலை பரவி வருவதாக உலக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.  இந்தநிலையில்,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 21.99 கோடியாக அதிகரித்துள்ளது

உலகம் முழுவதும்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 219,918,287 ஆக உயர்நதுள்ளது. இதுவரை  உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 4,555,719 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 196,560,081 பேர் குணமடைந்து இருப்பதாகவும், தற்போது உலகம் முழுவதும்  18,802,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலக கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,512,787என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 662,850என்பதும் குணமானோர் எண்ணிக்கை 19,801,725 என்பதும் குறிப்பிடத்தக்கது.

2வது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,830,712என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 582,004 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,036,947 என்பதும் குறிப்பிடத்தக்கது.

3வது இடத்தில் இந்தியாவி தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,902,345என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 439,916 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 32,056,085 என்பதும் குறிப்பிடத்தக்கது.