சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,37,732 ஆக உயர்ந் துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து, சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4லட்சத்து 39ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,37,732 ஆக உள்ளது. இதுவரை 1,22,407 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 12,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,788 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 13,130 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 60.93 சதவிகிதம் பேர் ஆண்கள் , 39.07 சதவிகிதம் பேர் பெண்கள் .
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர்:
கோடம்பாக்கம் – 1,383 பேர்
அண்ணா நகர் – 1,461 பேர்
தேனாம்பேட்டை – 865 பேர்
தண்டையார்பேட்டை – 726 பேர்
ராயபுரம் – 994 பேர்
அடையாறு- 1,099 பேர்
திரு.வி.க. நகர்- 918 பேர்
வளசரவாக்கம்- 914 பேர்
அம்பத்தூர்- 965 பேர்
திருவொற்றியூர்- 314 பேர்
மாதவரம்- 509 பேர்
ஆலந்தூர்- 760 பேர்
பெருங்குடி- 518 பேர்
சோழிங்கநல்லூர்- 528 பேர்
மணலியில் 154 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.