சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் 5ஆவது நாளாக தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6000க்கும் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம்தான முதலிடத்தில் இருக்கிறது. இருந்தாலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே வேளையில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருவது ஆறுதலை அளிக்கிறது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,02,283 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 56,278 பேருக்கு செய்யப்பட்டு உள்ளதால் மொத்தம் 27,33,295 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழக்தில் தற்போது வரை 56,698பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு
சென்னை- 1021 ராணிப்பேட்டை- 382 விருதுநகர்- 348 திருவள்ளூர்- 332 செங்கல்பட்டு-331 காஞ்சிபுரம்- 322 தேனி- 305 கோவை – 227 குமரி – 215 தூத்துக்குடி-215 தி.மலை -212 கடலூர்-167 வேலூர் -134 மதுரை -106 திருச்சி-101 விழுப்புரம் – 90
புதுக்கோட்டை- 86 நெல்லை- 85 தென்காசி- 75 திண்டுக்கல்- 75 கிருஷ்ணகிரி- 67 க.குறிச்சி- 66 சேலம்- 66 சிவகங்கை- 64 ராமநாதபுரம்- 62 திருப்பூர்- 45 திருப்பத்தூர்- 44 நாமக்கல்- 43 நீலகிரி -37 நாகை- 32 அரியலூர்- 20 பெரம்பலூர் -19 கரூர்-19 தஞ்சை-18 திருவாரூர்- 18 ஈரோடு – 13 தர்மபுரி – 4
வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
உத்தரபிரதேசம் – 01, கேரளா – 07, கர்நாடகா – 10, தெலுங்கானா – 01, ஆந்திரப்பிரதேசம் – 01, ஜம்மு ; காஷ்மீர் – 01, டெல்லி – 01, அரியானா – 01, மகாராஷ்டிரா – 01, ராஜஸ்தான் – 01, மேற்குவங்கம் – 01
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்: ஐக்கிய அரபு நாடுகள் – 04, ஓமான் – 01, சவூதி அரேபியா – 01