தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக 109 பேர் கொரோனாவுக்கு பலி…

Must read

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 102  பேர் கொரோனாதொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் வேறு நோயின் காரணமாக உயிரிழந்து இருப்பதால் மொத்த உயிரிழப்பு 109 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 1,021 பேருக்கு கொரோனா. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,800 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,02,283 ஆக உயர்ந்துள்ளது.

இன்று  ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,241-ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 102 பேர் மட்டுமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.  23 பேர் தனியார் மருத்துவமனை யிலும், 3 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில்,  86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு காரணமாக 7 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர், இதன் காரணமாக மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 30.07.2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது பெண் குழந்தை நிமோனியா மற்றும் கொரோனா காரணமாக 01.08.2020 உயிரிழந்தது. சென்னையில் 22.07.2020 அன்று  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது ஆண் கல்லீரல் செயலிழப்பு மற்றும் கொரோனா காரணமாக 31.07.2020 உயிரிழந்தார்.

More articles

Latest article