ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் 28லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் ஓராண்டை கடந்தும் கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. பல நாடுகளில் உருமாறிய நிலையில், கொரோனாவில் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பபட்டோர் மொத்த எண்ணிக்கை 130,802,165 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 105,295,247 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவபரை 2,850,152 பேர் தொற்று பாதிப்பு காரணமாக மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில், 22,656,766 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்ககாவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 31,314,625 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,67,610 பேர் மரணமடைந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து 23,825,635 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 6,921,380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8,707 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி 15,36,31,404 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45,63,056 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 400 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 633 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 41.86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ரஷ்யா முழுவதும் 2.77 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்து 07 ஆயிரத்து 083 ஆக உள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் 501 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 09 ஆயிரத்து 847 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.33 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 5.63 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.