சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் 24 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாக உள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை 7 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று மேலும், 1,578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,607 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,14,291 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,627 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும்,  1,51,855 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 4,72,99,526 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 17,046 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

[youtube-feed feed=1]