சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த பாதிப்பு 4,33,969 ஆக உயர்ந் துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில்  1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில்  நேற்று ஒரே நாளில் 1,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த  எண்ணிக்கை 1,36,697 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில்  மட்டுமே நேற்று 1,194 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதனால், இதுவரை தொற்று குணமாகி வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,20,820 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், 13,107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் நேற்று  22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,770 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 13,323 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]