டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், நேற்று மட்டும்  புதிதாக மேலும், 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,34,86,326 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்று பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்ற  29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,168 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,684 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,51,590 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும்  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக  1,09,568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,09,776 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 1,97,84,80,015 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.