01/08/2020 சென்னையில் கொரோனா நோய்  பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Must read

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில்,  நேற்று  ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 84,916 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 12,765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 2113 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் (ஜூலை 31ந்தேதி) சென்னையில் மட்டும் 11,376 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் 08-05-2020 முதல் 31-07-2020 வரை 25,727 காய்ச்சல் சோதனை முகாம்கள்  நடத்தப்பட்டு உள்ளன. இதில்,  15,01,812 பேர் கலந்து கொண்டனர், மேலும் 83,507 அறிகுறி நோயாளிகள் COVID-19 க்கு அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர், மற்றவர்கள் சிறு வியாதிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கோடம்பாக்கம் – 1,606
அண்ணா நகர் – 1,385
தேனாம்பேட்டை – 1,062
தண்டையார்பேட்டை – 587
ராயபுரம் – 812
அடையாறு – 1,149
திரு.வி.க. நகர் – 1,050
வளசரவாக்கம் – 926
அம்பத்தூர் – 1,307
திருவொற்றியூர் – 400
மாதவரம் – 631
ஆலந்தூர் – 541
பெருங்குடி – 504
சோழிங்கநல்லூர் – 454
மணலி – 117

 

More articles

Latest article