சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கடந்த 24மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு 7மணி அளவில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை 118 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 91 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 27 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதிக பட்சமாக சென்னையில் 92 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 70 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 22 பேர் சிகிச்சையில் உள்ளனர்.