பெங்களூரு: சிபிஐ வலையில் சென்னையைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது சிக்கியுள்ளார். அவரது தோள்பையில் இருந்து, பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.74.81 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகமது இர்பான் அகமது, சென்னை விமான நிலையத்தில். விமான நுண்ணறிவு பிரிவு சுங்க கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஜனவரி 19 ஆம் தேதி அன்று சுங்கத்துறை அதிகாரி முகமது இர்பான் அகமது தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக லக்னோவுக்கு திட்டமிடப்பட்ட இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் லக்னோவுக்கு செல்லும் விமானத்தை தவறவிட்டனர். இதனால் பெங்களூரு சென்று லக்னோ செல்ல திட்டமிட்டு பெங்களூரு சென்றனர்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அவர்களின் உடமைகள் வைத்திருந்த பைகளை விமான புலனாய்வு பிரிவு (வருமான வரித்துறை) சோதனை செய்தபோது, அப்போது, முகமது இர்பான் அகமதுவின் பையில் 74,81,500 பணம் மற்றும் 169.05 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் சில மொபைல் போன்களை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முகமது இர்பான் அகமது தம்பதியினர் திருப்திகரமாக கணக்கு காட்டாததால் பணத்தை கைப்பற்றி அவர்கள்மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு கிளை முகமது இர்பான் அகமது, சுங்க கண்காணிப்பாளர், விமானப் புலனாய்வுப் பிரிவு, சென்னை மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ன் கீழ் வழக்கு பதிவு செய்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையின்போது மேலும், 2.84 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுடன் 64,500 கண்டுபிடிக்கப்பட்டது. திரு. அகமதுவும் அவரது மனைவியும் கைப்பற்றப்பட்ட பணம் அவர்களது உறவினர்களிடமிருந்து கடன் வாங்கப்பட்டதாகக் கூறினாலும், மேலும் விசாரணையில் அது உண்மை இல்லை என்று தெரியவந்தது.
கொரோனா பொதுமுடக்கம் காலமான ஜூலை 13, 2020 முதல் ஜனவரி 21, 2021 வரை அவரது வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளதும், அவரது வருமானம், செலவுகள் மற்றும் விலைமதிப்பற்ற உடைமைகளை வைத்திருத்தல் ஆகியவற்றைக் கணக்கிட்டு பார்த்தபோது, முகமது இர்பான் அகமது சென்னை விமானப் புலனாய்வுப் பிரிவின் சுங்க கண்காணிப்பாளராக பணிபுரிந்தபோது, முறைகேடாக சொத்துக்களைப் பெற்றது தெரியவந்தது.. அவரது பெயர் மற்றும் அவரது மனைவி பெயரில், 75,64,725 கணக்கில் வராத பணம் உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்த விவகாரம் சிபிஐ கைக்கு சென்றுள்ளது. சிபிஐ அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
முகமது இர்பான் அகமது பிப்ரவரி 24, 2016 அன்று சுங்கத் துறை தடுப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார் மற்றும் ஜனவரி 1, 2020 அன்று சுங்க கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.