தெறி
 
பொதுவாகவே நடிகர்களு்ககு உலக விசயம் தெரியாது என்றகருத்து உண்டு. பலர் “ஆமா.. நான் அப்படித்தான்” என்று வெளிப்படையாகவே சொல்வது உண்டு. ஒட்டுமொத்த உலக விசயத்தை கரைத்துக்குடித்த கமல் மாதிரி சில ஆசாமிகளும் அரிதாக உண்டு.
சரி.. எதற்கு இவ்வளவு பில்ட் அப் என்கிறீர்களா?
நேற்று தெறி பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் சுவாரஸ்யமாக பேசி அசத்தினார். “இந்த படத்துல ரெண்டு ஹீரோயின்ஸ். ஒண்ணு செல்பி புள்ள. இன்னொன்னு குல்பி புள்ள…’ என்று பஞ்ச் டயாலாக் அடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.
அது மட்டுமல்ல.. ஒலக ரேஞ்சில் ஒரு கதையும் சொன்னார்.
“ஒரு சின்னப்பையன் தெருவோரத்தில் ரஷ்யத் தலைவர் மாவோ அவர்களின் படத்தை மட்டும் விற்றுக் கொண்டிருந்தான். அந்த வழியாக போன மாவோ இதை பார்த்துவிட்டு, தம்பி… நீ இப்படி ஒருவருடைய படத்தை மட்டும் விற்பதற்கு பதிலாக எல்லா தலைவர்களின் படங்களையும் விற்பனை செய்” என்றார். அதற்கு அந்த சிறுவன், |அதெல்லாம் முன்னாடியே வித்துப் போச்சு. இது மட்டும்தான் இன்னும் விற்காம கிடக்கு” என்றானாம்”. – இந்தக் கதையை விஜய் சொல்லி முடித்ததம் பயங்கர கரகோசம்.
அதே நேரம், “மாவோ, சீன தலைவராச்சே. இவர், ரஷ்ய தலைவர் என்று சொல்லிவிட்டாரே” என்று சிலர் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.
அதோடு, “நாளைய முதல்வர் கனவில் இருப்பவர், உலக விசயங்களை அறிஞ்சி பேச பேச வேண்டாமா” என்று ஆதங்கமும் பட்டார்கள்.
இப்போது சமூக இணையதளங்களில் அஜீத் ரசிகர்கள் இந்த விசயத்துக்காக விஜய்யை பயங்கரமாக கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.