புதுடெல்லி:

வேதிப் பொருள் இருக்கும் மேகியை நாங்கள் ஏன் சாப்பிட வேண்டும் என நெஸ்லே நிறுவன வழக்கறிஞரிடம் உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேகியில் வேதிப் பொருள் அதிக அளவில் கலக்கப்படுவதால், அதன் விற்பனையை கடந்த 2015-ம் தேதி தேசிய நுகர்வோர் குறைதீ்ர்வு தீர்ப்பாயம் தடை செய்தது. இந்த தடையை நீக்கிய உச்சநீதிமன்றம், மேக்கி மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பி சோதிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், தவறான விளம்பரம், தவறான வர்த்தகம், பொய் தகவலுடன் லேபில் ஒட்டியது தாெடர்பாக மேக்கி நுடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் அரசுக்கு ரு. 640 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், கடந்த 2015-ம் ஆண்டு மேகி விற்பனைக்கு தடை விதித்தது. இந்த தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியது.
இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான நெஸ்லே நிறுவன தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மன்னு சிங்வி, மேகியில் குறைந்த அளவே வேதிப் பொருள் கலந்திருப்பதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் சந்திரசுட் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அளவு பிரச்சினை இல்லை. வேதிப் பொருள் இருக்கும் மேகியை நாங்கள் ஏன் சாப்பிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கை தேசிய நுகர்வார் தீர்ப்பாயத்துக்கே விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளிக்கலாம் என்று வழக்கறிஞர் அபிஷேக் மன்னு சிங்வி தெரிவித்தார். தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாயத்தின் அதிகார வரம்புக்குள் நாங்கள் தலையிட விரும்ப வில்லை என்று குறிப்பிட்டு, வழக்கறிஞர் சிங்வியின் யோசனையை நிராகரித்தனர்.