3
சென்னை:
மீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிவாரணத்தொகை கிடைக்குமா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரேசன் கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்காகன கணக்கெடுப்பும் நடந்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 30 ஆயிரம் பேர், தங்களுக்கு நிவாரண உதவித்தொகை தேவையில்லை என்றும், மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அளியுங்கள் என்று கூறிவிட்டனர்.
மற்றபடி பெரும்பாலான மக்கள், தங்களது பெயரை நிவாரண உதவித்தொகைக்கான கணக்கெடுப்பில் பதிந்தனர். ஆனால், பல பகுதிகளில், பல குடும்பங்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உதாரணமாக, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கத்தில் உள்ள யமுனா நகர், பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல குடும்பங்கள், நிவாரண கணெக்கடுப்பில் விடுபட்டுள்ளதாக மக்கள் புலம்புகிறார்கள். அதே போல, சென்னை நகர் பகுதியிலும் பலர் விடுபட்டுள்ளர்.
அதே போல கணக்கெடுப்பில் தங்களது பெயரை பதிந்தவர்களுக்கும் தொகை கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளார்கள். காரணம், பதிந்த பலருக்கு, “கணக்கெடுப்பில் உங்கள் பெயரை பதிந்திருக்கிறீர்கள். ஆனால் வங்கி கணக்கு வேறு பெயரில் உள்ளது” என்று எஸ். எம். எஸ். வந்திருக்கிறது.
மக்களோ, “ரேசன் கார்டில் கணவர் பெயர் இருப்பதால் அவரது பெயரை பதிந்தார்கள். அதே நேரம், மனைவியின் பெயரில் உள்ள வங்கி கணக்கு எண்ணை அளித்தார்கள். பல குடும்பங்களில், ஆண்களின் கைக்கு பணம் போனால் என்ன ஆகும் என்று தெரியும். அது டாஸ்மாக்குக்குத்தான் போகும். ஆகவேதான் இப்படி பல பெண்கள் பதிந்தார்கள். இதில் என்ன தவறு” என்கிறார்கள்.
இது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “கடந்த மாதம் 27ம் தேதியே கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. விடுபட்டவர்களை சேர்ப்பது குறித்து எங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்ல.
கணக்கெடுப்பில் யார் பெயரை பதிகிறார்களோ அவர்தளது பெயரில் உள்ள வங்கி கணக்கு எண்ணைத்தான் பதிய வேண்டும். ஆனால் பலர், கணவர் பெயரை பதிந்துவிட்டு, மனைவி பெயரிலான கணக்கு எண்ணை அளித்திருக்கிறார்கள். இது குழப்பத்தை ஏற்படுத்துவதால், அதுபோல அளித்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம்” என்றார்கள்.
அதே நேரம், “தேர்தல் நெருங்கும் நேரம். ஆகவே விடுபட்டவர்களைச் சேர்க்கும்படி உத்தரவு வரும் என்றே நினைக்கிறோம். அதே போல ரோசன் கார்டில் இருப்பவர் எவரது வங்கி எண்ணாக இருந்தாலும் பணம் அளிக்கும்படியும் உத்தவரு வரலாம்” என்கிறார்கள்.
“இன்னும் மழை வருமா” என்று பயந்து பயந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், இப்போது “நிவாரணத்தொகை கிடைக்குமா கிடைக்காதா” என்ற  எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.