
நடிகர் சங்கத்தின் முந்தைய செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எங்களின் நடவடிக்கைகள். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு சினிமா தயாரித்து அதன் மூலம்தான் கட்டுவோம். முன்பு போல் நட்சத்திர இரவு, கலை நிகழ்ச்சிகள் நடத்தி வசூல் செய்யமாட்டோம் என்று கூறியிருந்தார் விஷால். ஆனால், தற்போது நட்சத்திர கிரிக்கெட் நடத்தி வசூல் செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். நட்சத்திர கிரிக்கெட் – நட்சத்திர இரவுவுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லையே விஷால்? இரண்டுமே வசூல் நோக்கில் செய்யப்படும் நிகழ்ச்சிகள்தானே விஷால்? சினிமா தயாரித்து அதன் வசூல் மூலம் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் திட்டம் என்னவாயிற்று விஷால்?
Patrikai.com official YouTube Channel