சென்னை
பல்லாவரம் – குன்றத்தூர் சாலை விரைவில் அகலப்படுத்தப்படும் என தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மலில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் அமைச்சர் தா மோ அன்பரசன் தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் பம்மல் நகராட்சி தலைவர் செய்திருந்தார். விழாவில் செங்கல்பட்டு ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பரசன், “தற்போது பம்மல், அனகாபுத்தூர் பகுதியில் மக்களின் வீடுகளுக்கே நேரடியாகக் குடிநீர் வழங்கப்படுகிறது. முந்தைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் தற்போது விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் பல்லாவரம் – குன்றத்தூர் பிரதான சாலையை அகலப்படுத்தும் பணி விரைவில். பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். பொதுமக்கள் வழங்கியுள்ள மனுக்கள் துறை ரீதியாகப் பிரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.” என அறிவித்துள்ளார்.