விமானத்தில் யோகா, தியானம் செய்ய அடம்  தென்கொரிய பயணி கைது
 134
ஹவாயில் இருந்து பறந்து கொண்டிருந்த  விமானத்தின் இருக்கையில் அமராமல் யோகா மற்றும் தியானம் செய்வேன் என்று அடம்பிடித்து தகராறில் ஈடுபட்ட தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பயணியை அமெரிக்க காவல்துறை ( எப்.பி.ஐ.) கைது செய்தது.
அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி, ஹானலூல்யூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  நாரிடா சர்வதேச விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டிருந்தது.அதில் பே எனும் தென் கொரியா நாட்டவரும் தனது மனைவியுடன் பயணம் செய்தனர். அப்போது விமானத்தில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்ட்து. அந்த நேரத்தில் தனது இருக்கையில் அமர மறுத்த பே, விமானத்தின் பின் பகுதிக்குச் சென்றார். அங்கு யோகா மற்றும் தியானம் செய்யப்போவதாக அடம்பிடித்தார். அப்போது அவரது மனைவியும் விமானப் பணியாளர்களும் அவருடைய இருக்கைக்கு திரும்புமாறு வலியுறுத்தி உள்ளனர்.  ஆனால் கோபம் கொண்ட  பே  தன்னை யோகா செய்யவிடாமல் தடுத்த அவருடைய  மனைவியை பிடித்து கீழே தள்ளினார். மேலும் அங்கு நின்றவர்களை திட்டிக் கொண்டு கடிக்கவும் முயற்சி செய்துள்ளார். உடனே அந்த விமானத்தில் பயணம் செய்த கப்பற்படை வீர்ர்கள் பே வை மடக்கிப்பிடித்து அவருடைய இருக்கையில் அமரச் செய்தனர்.   இதுதொடர்பாக விமானி புகார் செய்தார். இதனை அடுத்து பயணிகளை கொல்லப்போவதாக அச்சுறுத்தியது, விமானத்துக்குள்  கடவுள் இல்லை என்று ஆபாசமாய் திட்டியது ஆகிய காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பே கைது செய்யப்பட்டார். அவரை  உடனடியாக விடுவிக்க அமெரிக்க உதவி அட்டார்னி ஜெனரல் மறுத்துவிட்டார்.
இவரை விடுதலை செய்தால் அவர் மனைவி உள்பட மற்றவர்களுக்கு ஆபத்து என்றும் அல்லது அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறி தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என வாதாடினார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பிணையில் விடுவித்தார். ஆனால் அவர் மன்நல மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும், அங்குள்ள ஒஹாவு தீவினை விட்டு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார். பே தாயகம் திரும்பவும் நீதிபதி மறுத்துவிட்டார். 7
2 வயதான பே  தென் கொரியாவிலிருந்து தனது மனைவியுடன் 40 ஆவது திருமணவிழாவை ஹவாய் தீவில் கொண்டாடிவிட்டு திரும்பும்போதுதான் இப்படி நிகழ்ந்துவிட்ட்து, கணவனும் மனைவியும் ஹவாய் சென்றது இதுவே முதல் முறை என்றும் பே க்காக வாதாடிய அவருடைய வழக்குரைஞர் தெரிவித்தார். சிறிது நாட்களுக்கு முன்புதான் பே, யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு உல்லாசத் தீவான ஹவாயில் போதிய தூக்கம் இல்லாத்தாலும் சற்று பதட்டத்துடன் இருந்த்தாலும் அவருக்கு இந்தப்பிரசினை ஏற்பட்டுவிட்ட்தாக  வழக்குரைஞர் கூறினார்.