2965
துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார்.
இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். (இந்திய மதிப்பில் ரூ.650 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
வளைகுடா பிராந்தியத்தில் எண்ணெய் வருவாய் குறுகி வருவதால் விமான நிலைய விரிவாக்கம் இந்த நிதி கொண்டு செய்யப்படும்.
78 மில்லியன் க்கும் மேற்பட்ட பயணிகள் 2015 ல் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். பிப்ரவரி மாதத்தில், துபாய் விமான நிலையம் டி முனையத்தில் (Terminal D) திறப்பு மூலம் அதன் திறன் 90 மில்லியன் பயணிகள் அதிகரித்துள்ளது.
சுமார் 100 விமான 240 க்கும் அதிகமான இடங்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் மையம் (International Hub)மூலம் ஒரு நாளுக்கு வந்து செல்கின்றது.