கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்றனர். அப்போது மரக்காணம் அருகே பாமகவினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் செல்வராஜ் உயிரிழந்தார்.
இது கொலை வழக்காக பதியப்பட்டது. , மரக்காணத்தைச் சேர்ந்த மணிகண்டன், ரகு, செந்தில்குமார், பாரிநாதன், ராஜூ, சேகர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திண்டிவனம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி செல்வ முத்துக்குமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
ஆனால், 2013ம் ஆண்டு, சட்டபையல் பேசிய முதல்வர் ஜெயலலிதா,” செல்வராஜ் கொல்லப்படவில்லை. வாகன விபத்தில் உயிரிழந்தார்” என்று அறிவித்தார். அப்போதே, “காவல்துறையினர் முதல்வருக்கு தவறான தகவலை தந்திருக்கிறார்கள். செல்வராஜ் கொலைதான் செய்யப்பட்டார்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், ஏழுமலை சீனிவாசன், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
“மரக்காணம்,,,கலவரம்…கொலை.. தீர்ப்பு
2013-கலவரத்தில் கொலை என்று பலமாக குற்றச்சாட்டு வெடித்த நிலையில், வாகனத்திலி்ருந்து தவறி விழுந்த வர்னு ஒரு மாநில முதலமைச்சரே சொன்னார்.
புலனாய்வு, நீதிமன்ற விசாரணை போன்றவை முடிவுக்கு வரும் முன்பு முதலமைச்சர் எதன் அடிப் படையில் அப்படி சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்…ஒரு முதல்வராக இருப்பவர் அப்படி பேசக் கூடாது என்பது பதவிக்குண்டான லட்சணம்..
வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர்னு முதலமைச்ச ரால் சொல்லப்பட்டவர், கொலைதான் செய்யப்பட்டார் என்று இன்று திண்டிவனம் நீதிமன்றம் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது..
மிகவும் சென்சிடிவ்வான விவகாரங்களில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொங்கலாம்.. ஆனால் அரசின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அப்படி பொங்காமல் இருப்பது நல்லது!”