2
தஞ்சை பெரியகோவில் அருகே அகழியை ஒட்டி உள்ள சீனிவாச புறம் பகுதியில் அகழியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. பாலம் கட்ட குழி தோண்டும் பொழுது மிக பெரிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . கிட்ட தட்ட பத்து நபர்கள் நிற்கும் அளவு அகலமாக இருந்ததாகவும் நேரில் பார்த்த நம்பகமான நபர்கள் மூலம் தகவல் தெரிந்து உள்ளது. பாலம் ஒப்பந்தந்ததில் பிரச்னை வரும் என்பதால் ஒப்பந்தகாரர் வெளியில் தெரியாமல் அவசர அவசரமாக மூடிவிட்டார் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதே போல் 1989 ஆம் ஆண்டு இதே சீனிவாசபுரத்தில் ராசராசன் நகரில் ஒரு தனியார்க்கு வீடுகட்ட ஒப்பந்தகாரர் ஒருவர் கடைகால் தோண்டினார் அப்பொழுது 10 அடி ஆழத்திற்கு மிக நீண்ட கற்றூண் ஒன்று கல்வெட்டுகளுடன் புதைந்து இருந்தது. கல்வெட்டுகளின் முக்கியத்துவம் உணராத அந்த ஒப்பந்தகாரர் அந்த தூணை 70 துண்டுகளாக உடைத்து, கட்டுமானத்திற்கு பயன்படுத்த தயாராகிவிட்டார் அப்பொழுது இந்த தூணின் அருமை அறிந்த சிலர் அகழ்வாராய்ச்சியாளர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் இந்து பத்திரிகையின் நிருபர் திரு வி .கணபதி அவர்களுக்கும் தகவல் அளித்தனர். இவர்கள் இருவரும் உடனே சென்று பார்த்து அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் மச்சேந்திரநாதன் அவர்களின் உதவியுடன் உடைந்த கல் துண்டுகளை கைப்பற்றினார். பிறகு முனைவர் இரா. நாகசாமி இத்துண்டுகளை படித்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தை அறிவித்தார்.
தமிழக மற்றும் இந்திய தொல்லியியல் துறையினர் இக்கல்வெட்டின் துண்டுகளை படியெடுத்து பதிவுசெய்தனர், இப்பொழுது அந்த கல்தூண் தஞ்சை ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் உள்ள ராசராசன் அருகாட்சியகத்தில் உள்ளது. என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
மேலும் ராசராசன் அரண்மனையும் சீனிவாசபுரம், மேல்வெளி பகுதியில் இருந்து இருக்கலாம் தொல்லியல் ஆர்வலர்களின் நம்பிக்கையும் கூட, ஆகவே இந்த சுரங்கபாதையும் சோழர் வரலாற்றோடு தொடர்புடையதாக இருக்கலாம், ஆகவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் குழுமத்தின் சார்பாக கேட்டுகொள்கிறோம், தொல்லியர் ஆர்வலர்களும் அந்த இடத்தில விரைந்து சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
தமிழர் பெருமையும் வரலாற்றையும் மீட்டு எடுக்க வேண்டியது நமது கடமை, இழந்த தமிழர் பெருமைகள் போதும் மிச்சம் இருப்பதையாவது மீட்போம், காப்போம்
நம்பகமான நபர் மூலம் இந்த செய்தி கிடைத்தது. இந்த செய்தியின் உண்மை நிலவரத்தை சம்பத்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்ய வேண்டுகிறோம்.

  •  கணேஷ் அன்பு (முகநூல் பதிவு)