சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த 150 பயணிகளும் சுங்கத்துறை நடைமுறைகளுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை தாயகம் அழைத்து வர வந்தே பாரத் மிஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது நடைமுறையில் இருக்கும் 3வது கட்டம் வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. லண்டனில் இருந்து சென்னை வந்த 150 பயணிகளும் சுங்கத்துறை நடைமுறைகளுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பயணிகள் லண்டனில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இத்தகவலை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.