Kamal-Haasan-meets-Raj-Thackeray

காராஷ்டிரா நவநிர்மாண் சபையின் தலைவர் ராஜ் தாக்கரேயை   அவரது மும்பை இல்லத்தில் சந்தித்தார்  கமல்ஹாசன்.   காலை 9.20 மணியளவில்  நடந்த இந்த சந்திப்பின்போது, ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளா மற்றும் மகள் ஊர்வசியையும் இருந்தனர். பிறகு தனியாக  ராஜ்தாக்கரேவுடன்  சுமார் அரைமணி நேரம் பேசியிருக்கிறார் கமல்.

“நாங்கள் பழைய நண்பர்கள். நட்பின் அடிப்படையில் அவரைச் சந்திக்க வந்தேன்… கைகுலுக்கினோம்..” என்றார் கமல்.

ராஜ்தாக்கரே தரப்பிலும், “ச்ச்சும்மாத்தான் சந்தித்தார் கமல்” என்கிறார்கள்.

ஆனால் “சும்மா சந்திக்கிற அளவுக்கு இருவரும் நெருக்கமான நண்பர்கள் கிடையாது. தவிர நெருக்கமான ஆட்களைக்கூட சும்மா சந்திக்கிற ஆட்களும் இவர்கள் கிடையாது.  கமலின் தூங்காவனம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாகிறது. முதல் பாகம் வெளியானபோது, சிறுபான்மை மத ரீதியான சில அமைப்புகள் எதிர்த்தன.  இரண்டாம் பாகத்தில் வரும் சில காட்சிகளை பெரும்பான்மை மதத்தவர்கள் எதிர்க்கக்கூடும் என்று கமல் நினைக்கிறார். அதற்காக விளக்கம் அளிக்கவே ராஜ்தாக்கரேவை பார்த்தார்” என்கிறது ஒரு தரப்பு.

இன்னொரு தரப்போ, “அப்படி எல்லாம் இல்லை. தூங்காவனம் படத்துக்குப் பிறகு விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வருமா என்பது சந்தேகம்தான். தவிர படத்துக்கு எதிர்ப்பு ஏற்படுமோ என்று கமல் நினைத்தால் ஆளும் சிவசேனாவின் உத்தவ்தாக்கரேவைத்தானே சந்தித்திருக்க வேண்டும். இந்தி படங்களில் நடிக்கும் கமல் மகள் ஸ்ருதி சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்றை தீர்க்க, உதவி கோரியே ராஜ்தாக்கரவை கமல் சந்தித்தார்” என்கிறது.

அதற்கு ஆதாரமாக,  சந்திப்பு போட்டோவையே சொல்கிறார்கள். அதாவது, ” புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் கமல் கில்லாடி. பிறவி நடிகர் அல்லவா. ஆனால், சந்திப்பு போட்டோவில் சோகத்துடன் காட்சி அளிக்கிறார் கமல்.  ராஜ்தாக்கரேவோ, “பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன்” என்கிற தோரணையல் அமர்ந்திருக்கிறார். ஏற்கெனவே, ஒரு படத்தில் கால்ஷீட் கொடுத்துவிட்டு இழுத்தடித்தார் ஸ்ருதி. அந்த நிறுவனம் ஸ்ருதி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. பிறகு விட்டால் போதும் என்று வழக்கில் இருந்து தப்பித்தார். அதோடு ஸ்ருதியின் சில பழக்கவழக்கங்கள்.. அதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும் செய்திகள் அவ்வப்போது வந்த படியேதான் இருக்கிறது. ஆகவே ஸ்ருதி விவகாரம்தான் இந்த சந்திப்புக்கு காரணம்.”என்கிறார்கள்.

ஹும்..  போட்டோ சைக்காலஜியில நம்ம ஆட்களை அடிச்சிக்கவே முடியாது.  எப்படி எல்லாம் துப்பறியறாங்க..?