சென்னை
கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் ராஜராஜ சோழன் சமாதி அருகே ராடார் மூலம் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் மாவட்டம் உடையாளூர் என்னும் ஒரு சிற்றூரில் உள்ளதாக சொல்லப்படுகிறது இந்த ஊரில் ஒரு இடத்தில் லிங்கம் ஒன்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுவே ராஜராஜ சோழன் சமாதி என சொல்லப்படுகிறது. இந்த இடத்தை தொல்லியல் ஆய்வு செய்யக் கோரி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது.
இன்று இந்த அமர்வு தமிழக தொல்லியல் துறைக்கு உடையாளூரில் உள்ள லிங்கத்தைச் சுற்றி உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை ரடார் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் இதை போல் இன்னும் 24 அகழாய்வு குறித்த அறிக்கையையும் விரைவில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.