r

ந்த நேரத்தில், விஷால், “மக்கள் பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது.  வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது. நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை” என்று சொன்னாரோ… சமூகவலைதளங்களில் நடிகர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள்.

“எங்களை வைத்துத்தானே பிழைக்கிறீர்கள்..” என்று ஆரம்பித்து, “ஆந்திர மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது இவ்வளவு கொடூத்தீர்களே..” என்று புள்ளிவரத்தோடு போட்டுத்தாக்க ஆரம்பித்தார்கள்.

இதற்கிடையில் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற சிலர் சிறு சிறு உதவிகள் செய்தாலும் நெட்டிசன்களின் கோபம் தீரவில்லை.

இதை உணர்ந்தோ என்னவோ, தாமதமானாலும் பரவாயில்லை என்று சில நடிகர்கள் வெள்ள நிவாரண நிதி அளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம், சூர்யா, கார்த்தி, சிவகுமார் சார்பாக 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் 10 லட்சமும், நடிகர் தனுஷ் 5 லட்சமும் கொடுத்து கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இனி மற்ற நடிகர்களும் தங்கள் பங்குக்கு நிதி உதவி அளிப்பார்கள் என்ற பேச்சு ஆரம்பித்திருக்கிறது. முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் மட்டுமின்றி, திரையுலகினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

“வெள்ளத்தால் தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்று ரஜினி தன்னிடம் சொன்னதாக அரசியல் பிரமுகர் ஒருவர் சொல்ல… இப்போது விசயம் தீயாக பற்றியிருக்கிறது.

“தன்னைவிட ஜூனியர் நடிகர்கள் எல்லாம் பத்து, இருபது லட்சம் கொடுக்கிறார்கள். ஆகவே நதி நீர் இணைப்புக்குக்காக கொடுப்பதாக சொன்ன ஒரு கோடி ரூபாயை தரலாம் என்று ரஜினி திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து மலேசியாவில் இருந்தபடியே. தனது மனைவி லதாவிடம் பேசினார். அவரோ, மற்ற நடிகர்களைப்போல லட்சத்தில் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டார். ஆகவே நாளை அல்லது மறுநாள், ரஜினியின் நிதி உதவி பற்றி செய்தி வரும். மற்ற நடிகர்களைப்போல அவரது நிதியும் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் ஒப்படைக்கப்படும்” என்கிறது ரஜினிக்கு நெருங்கிய வட்டாரம்.